வாஷிங்டன்

கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 81,887 உயர்ந்து 23,30,856 ஆகி இதுவரை 160,754 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

உலக அளவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை  81,887 பேர் அதிகரித்து மொத்தம்23,30,856 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 6616 அதிகரித்து மொத்தம் 1,60,643 பேர் உயிர் இழந்துள்ளனர்.  5,96,482 பேர் இதுவரை குணம் அடைந்துள்ளனர்.  55,265  பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

நேற்று பாதிக்கப்பட்டோர் மற்றும் உயிர் இழந்தோர் எண்ணிக்கை அமெரிக்காவில் சற்று குறைந்துள்ளது.

அமெரிக்காவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை  29,067 பேர் அதிகரித்து மொத்தம் 7,38,792 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 1867 அதிகரித்து மொத்தம் 39,014 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 68,269  பேர் குணம் அடைந்துள்ளனர்.  தற்போது 13,561  பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

ஸ்பெயினில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை  3577  பேர் அதிகரித்து மொத்தம் 1,94,416 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 637 அதிகரித்து மொத்தம் 20,639 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 74,797 பேர் குணம் அடைந்துள்ளனர்.  தற்போது 7371  பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

இத்தாலியில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3491 பேர் அதிகரித்து மொத்தம் 1,75,925 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 482 அதிகரித்து மொத்தம் 23,227 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 44,797 பேர் குணம் அடைந்துள்ளனர்.  தற்போது 2733 பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

பிரான்சில் நேற்று 642  பேர் உயிரிழந்து மொத்த எண்ணிக்கை 19,323 ஆகி உள்ளது.  இங்கு நேற்று 3,824 பேர் பாதிக்கப்பட்டு மொத்தம் 1,51,793 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1370 பேர் அதிகரித்து மொத்தம் 15,7222 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 35 அதிகரித்து மொத்தம் 521  பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 2463 பேர் குணம் அடைந்துள்ளனர்.