சென்னை:
மிழகத்தில் கொரோனா பாதிப்பில், தலைநகர் சென்னை தொடர்ந்து டாப் கியரில் சென்றுகொண்டி ருக்கிறது. இதற்கு காரணம் கோயம்பேடு மார்க்கெட் என்று தமிழகமுதல்வர் எடப்பாடி பழனிச்சாமியே நேரடியாக குற்றம்சாட்டி உள்ளார்.‘
இந்த நிலையில்,  இன்று ஒரே நாளில் புதிதாக  509 பேர் பாதிக்கப்பட்டதை தொடர்ந்து, மொத்த பாதிப்பு 9 ,227 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் இன்று மட்டும் புதிதாக 380 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை  5,262  ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தின் மொத்த பாதிப்பில் ஏறக்குறைய 60 சதவிகித பாதிப்பு சென்னையிலேயே உள்ளது.
இதையடுத்து கோவையில் 146 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 3வதாக  திண்டுக்கல்லில் 111பேருக்கும்,  திருநெல்வேலியில் 98 பேருக்கும், ஈரோட்டில் 70, திருச்சியில் 63பேருக்கும்,நாமக்கல் 77மற்றும் ராணிப்பேட்டை 76, செங்கல்பட்டு 416, மதுரை 123, கரூர் 54, தேனி 71, மற்றும் திருவள்ளூரில் 492பேருக்கு, தூத்துக்குடியில் 36, விழுப்புரத்தில் 306பேருக்கும், கிருஷ்ணகிரியில் 20 பேருக்கும், தருமபுரியில் 5 பேருக்கும் கொரோனா தொற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும், திருப்பூரில் 114, கடலூர் 413, மற்றும் சேலத்தில் 35, திருவாரூரில் 32, விருதுநகர் 44, திருவண்ணாமலை 128, தஞ்சாவூர் 70, நாகப்பட்டினம் 47, திருப்பத்தூர் 28, கன்னியாகுமரியில் 26 மற்றும் காஞ்சிபுரத்தில் 160பேருக்கும், சிவகங்கை 12 மற்றும் வேலூரில் 34 பேருக்கும், நீலகிரியில் 13 பேருக்கும், தென்காசி 53, கள்ளக்குறிச்சியில் 61 பேருக்கும் ராமநாதபுரத்தில் 30பேருக்கும், அரியலூர் 348 மற்றும் பெரம்பலூரில் 133பேருக்கும், புதுக்கோட்டையில் 6பேருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி விமான நிலையத்தில் 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.