கொரோனா: பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 71.89 லட்சத்தை தாண்டியது.

வாஷிங்டன்

கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 1,07,270 உயர்ந்து 71,89,868 ஆகி இதுவரை 4,08,240 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

 

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,07,270 பேர் அதிகரித்து மொத்தம் 71,89,868 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 3157 அதிகரித்து மொத்தம் 4,08,240 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 35,32,224 பேர் குணம் அடைந்துள்ளனர்.  53,798 பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

அமெரிக்காவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 19,044 பேர் அதிகரித்து மொத்தம் 20,26,493 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 588 அதிகரித்து மொத்தம் 1,13,055 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 7,73,480 பேர் குணம் அடைந்துள்ளனர்.

பிரேசிலில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 18,925  பேர் அதிகரித்து மொத்தம் 7,10,887 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 813 அதிகரித்து மொத்தம் 37,312 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 3,25,602 பேர் குணம் அடைந்துள்ளனர்.

ரஷ்யாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8,9845  பேர் அதிகரித்து மொத்தம் 4,76,858 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 112 அதிகரித்து மொத்தம் 5,971 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 2,30,688 பேர் குணம் அடைந்துள்ளனர்.

ஸ்பெயினில் நேற்று 167 பேர் பாதிக்கப்பட்டு மொத்தம் 2,88,797 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கு நேற்று யாரும் உயிர் இழக்காதலால் மொத்த எண்ணிக்கை 27,136 ஆகவே உள்ளது.

இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8,442  பேர் அதிகரித்து மொத்தம் 2,65,928 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 266 அதிகரித்து மொத்தம் 7,473 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 1,25,095 பேர் குணம் அடைந்துள்ளனர்.