தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்

சென்னை

மிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது

தமிழகத்தில் நேற்று 1,410 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,81,915 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதில் 11,712 .பேர் உயிர் இழந்து 7,59,206 பேர் குணம் அடைந்து தற்போது 10,997 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

சென்னையில் மட்டும் இன்று 385 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இதுவரை சென்னையில் 2,15,360 பேர் பாதிக்கப்பட்டு 3,850 பேர் உயிர் இழந்து 2,07,761 பேர் குணம் அடைந்து தற்போது 3,749 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இரண்டாம் இடத்தில் கோவை மாவட்டம் உள்ளது. இதுவரை கோவை மாவட்டத்தில் 48,725 பேர் பாதிக்கப்பட்டு 613 பேர் உயிர் இழந்து 47,173 பேர் குணம் அடைந்து தற்போது 939 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மூன்றாவதாக செங்கல்பட்டு மாவட்டம் உள்ளது.  இதுவரை செங்கல்பட்டு மாவட்டத்தில் 47,575 பேர் பாதிக்கப்பட்டு 713 பேர் உயிர் இழந்து 46,291 பேர் குணம் அடைந்து தற்போது 571 பேர் சிகிச்சையில் உள்ளனர்.