சென்னை
மிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது.
கடந்த 24 மணி நேரத்தில் 3914 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 6,87,400 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் 10,642 பேர் உயிர் இழந்து 6,37,637 பேர் குணம் அடைந்து தற்போது 39,121 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
சென்னையில் மட்டும் இன்று 1036 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.
இதுவரை சென்னையில் 1,89,995 பேர் பாதிக்கப்பட்டு 3,520 பேர் உயிர் இழந்து 1,73,892 பேர் குணம் அடைந்து தற்போது 12,583 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
அடுத்ததாக செங்கல்பட்டு மாவட்டத்தில் 41,164 பேர் பாதிக்கப்பட்டு 630 பேர் உயிர் இழந்து 38,797 பேர் குணம் அடைந்து தற்போது 1,737 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
மூன்றாவதாக கோவை மாவட்டத்தில் 39,818 பேர் பாதிக்கப்பட்டு 523 பேர் உயிர் இழந்து 35,481 பேர் குணம் அடைந்து தற்போது 3,814 பேர் சிகிச்சையில் உள்ளனர்.