தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மாவட்டம் வாரியான பட்டியல்

சென்னை

மிழகத்தில் கொரோனா பாதிப்பு மாவட்டம் வாரியான பட்டியல் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் இன்று 5589 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு மொத்தம் 5,86,397 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுவரை 9,383 பேர் மரணம் அடைந்து 5,30708 பேர் குணம் அடைந்து தற்போது 46,306 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இன்று சென்னையில் 1283 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னையில் இதுவரை 1,64,744 பேர் பாதிக்கப்பட்டு 3,179 பேர் உயிர் இழந்து 1,50,522 பேர் குணம் அடைந்து தற்போது 11,043 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

அடுத்ததாக செங்கல்பட்டு மாவட்டத்தில் 34,855 பேர் பாதிக்கப்பட்டு 545 பேர் உயிர் இழந்து 32,121 பேர் குணம் அடைந்து தற்போது 2,189 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மூன்றாவதாக திருவள்ளூர் மாவட்டத்தில் 31,887 பேர் பாதிக்கப்பட்டு 544 பேர் உயிர் இழந்து 29,754 பேர் குணம் அடைந்து தற்போது 544 பேர் சிகிச்சையில் உள்ளனர்.