ஆந்திரப் பிரதேசத்தில் இன்றும் 10000 ஐ தாண்டிய கொரோனா பாதிப்பு

--

விஜயவாடா

ந்திர மாநிலத்தில் இன்று 10167  பேர் கொரோனாவால்  பாதிக்கப்பட்டு மொத்த எண்ணிக்கை 1,30,557 ஆகி உள்ளது.

ஆந்திர மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

 கடந்த 24 மணி நேரத்தில் 10,167 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

 தொடர்ந்து இரண்டாம் நாளாக இங்கு பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 10 ஆயிரத்தைத் தாண்டி உள்ளது.

மொத்தம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,30,357 ஆகி உள்ளது.

இன்று 68 பேர் மரணம் அடைந்து மொத்தம் 1281 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 4618 பேர் குணம் அடைந்து மொத்தம் 60,024 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்

தற்போது 69,252 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இன்று அதிகபட்சமாகக் கிழக்கு கோதாவரியில் 1441 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.

You may have missed