வாஷிங்டன்

கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 85010 உயர்ந்து 16,03,073 ஆகி இதுவரை 95,692 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

உலக அளவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை  85,010 பேர் அதிகரித்து மொத்தம்16,03,073 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 7234 அதிகரித்து மொத்தம் 95,612 பேர் உயிர் இழந்துள்ளனர்.  3,56,337 பேர் இதுவரை குணம் அடைந்துள்ளனர்.  49,158  பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

நேற்றைய பாதிக்கப்பட்டோர் மற்றும் உயிர் இழந்தோர் எண்ணிக்கை அமெரிக்காவில் அதிக அளவில் உள்ளது.

அமெரிக்காவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை  33,536 பேர் அதிகரித்து மொத்தம் 4,68,566 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 1900 அதிகரித்து மொத்தம் 16,691 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 25,928  பேர் குணம் அடைந்துள்ளனர்.  தற்போது 10,011 பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

ஸ்பெயினில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை  5002 பேர் அதிகரித்து மொத்தம் 1,53,222 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 655 அதிகரித்து மொத்தம் 15447 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 52,165 பேர் குணம் அடைந்துள்ளனர்.  தற்போது 7371  பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

இத்தாலியில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை  4204 பேர் அதிகரித்து மொத்தம் 1,43,626 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 610 அதிகரித்து மொத்தம் 18,279 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 28,922 பேர் குணம் அடைந்துள்ளனர்.  தற்போது 3606 பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

பிரான்சில் நேற்று 1341 பேர் உயிரிழந்து மொத்த எண்ணிக்கை 12,210 ஆகி உள்ளது.  இங்கு நேற்று 4799 பேர் பாதிக்கப்பட்டு மொத்தம் 1,17,749 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை  809 பேர் அதிகரித்து மொத்தம் 6725 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 48 அதிகரித்து மொத்தம் 226 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 620 பேர் குணம் அடைந்துள்ளனர்.