வாஷிங்டன்

கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 88,198 உயர்ந்து 22,50,119 ஆகி இதுவரை 1,54,241 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

உலக அளவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை  88,198 பேர் அதிகரித்து மொத்தம்21,82,025 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 8682 அதிகரித்து மொத்தம் 1,54,241 பேர் உயிர் இழந்துள்ளனர்.  5,71,577 பேர் இதுவரை குணம் அடைந்துள்ளனர்.  56,963  பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

நேற்றும் பாதிக்கப்பட்டோர் மற்றும் உயிர் இழந்தோர் எண்ணிக்கை அமெரிக்காவில் அதிக அளவில் உள்ளது.

அமெரிக்காவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை  32,165 பேர் அதிகரித்து மொத்தம் 7,09,735 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 2535 அதிகரித்து மொத்தம் 37,157 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 60,510  பேர் குணம் அடைந்துள்ளனர்.  தற்போது 13,509  பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

ஸ்பெயினில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை  5891  பேர் அதிகரித்து மொத்தம் 1,90,839 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 687 அதிகரித்து மொத்தம் 20,002 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 74,797 பேர் குணம் அடைந்துள்ளனர்.  தற்போது 7371  பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

இத்தாலியில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை  3493 பேர் அதிகரித்து மொத்தம் 1,72,434 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 576 அதிகரித்து மொத்தம் 22,745 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 40,164 பேர் குணம் அடைந்துள்ளனர்.  தற்போது 2936 பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

பிரான்சில் நேற்று 761 பேர் உயிரிழந்து மொத்த எண்ணிக்கை 18,681 ஆகி உள்ளது.  இங்கு நேற்று 1,909 பேர் பாதிக்கப்பட்டு மொத்தம் 1,47,969 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 922 பேர் அதிகரித்து மொத்தம் 14,352 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 38 அதிகரித்து மொத்தம் 486  பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 2041 பேர் குணம் அடைந்துள்ளனர்.