வாஷிங்டன்

கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 76,562 உயர்ந்து 31,36,508 ஆகி இதுவரை 2,17,813 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

உலக அளவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை  76,562 பேர் அதிகரித்து மொத்தம்31,36,508 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 6365 அதிகரித்து மொத்தம் 2,17,813 பேர் உயிர் இழந்துள்ளனர்.  9,53,309 பேர் இதுவரை குணம் அடைந்துள்ளனர்.  56,965 பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

அமெரிக்காவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 25,409 பேர் அதிகரித்து மொத்தம் 10,35,765 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 2470 அதிகரித்து மொத்தம் 59,266 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 1,42,238  பேர் குணம் அடைந்துள்ளனர்.  தற்போது 15,298 பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

ஸ்பெயினில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2706  பேர் அதிகரித்து மொத்தம் 2,32,128 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 301 அதிகரித்து மொத்தம் 23,822 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை1,23,903 பேர் குணம் அடைந்துள்ளனர்.  தற்போது 7764  பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

இத்தாலியில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2091  பேர் அதிகரித்து மொத்தம் 2,01,505 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 382 அதிகரித்து மொத்தம் 27,359 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 68,941 பேர் குணம் அடைந்துள்ளனர்.  தற்போது 1863 பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

பிரான்சில் நேற்று 2,638 பேர் பாதிக்கப்பட்டு மொத்தம் 1,65,911 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கு நேற்று 367 பேர் உயிரிழந்து மொத்த எண்ணிக்கை 23,660 ஆகி உள்ளது.

இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1873 பேர் அதிகரித்து மொத்தம் 31,324 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 69 அதிகரித்து மொத்தம் 1008  பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 7747 பேர் குணம் அடைந்துள்ளனர்.