வாஷிங்டன்
கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 85,335 உயர்ந்து 43,37,625 ஆகி இதுவரை 2,92,451 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

உலக அளவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 85,335 பேர் அதிகரித்து மொத்தம் 43,37,625 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 5320 அதிகரித்து மொத்தம் 2,92,451 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 15,97,665 பேர் குணம் அடைந்துள்ளனர்.  46,340 பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
அமெரிக்காவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 22,802 பேர் அதிகரித்து மொத்தம் 14,08,636 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 1630 அதிகரித்து மொத்தம் 83,425 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 2,96,746  பேர் குணம் அடைந்துள்ளனர்.  தற்போது 16,473 பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
ஸ்பெயினில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1377  பேர் அதிகரித்து மொத்தம் 2,69,520 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 176 அதிகரித்து மொத்தம் 26,920 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 1,80,470 பேர் குணம் அடைந்துள்ளனர்.  தற்போது 1534  பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
ரஷ்யாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10,889  பேர் அதிகரித்து மொத்தம் 2,32,243 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 197 அதிகரித்து மொத்தம் 2,116 பேர் உயிர் இழந்துள்ளனர்.  தற்போது 2300 பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
பிரிட்டனில் நேற்று 3.403 பேர் பாதிக்கப்பட்டு மொத்தம் 226,463 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கு நேற்று 627 பேர் உயிரிழந்து மொத்த எண்ணிக்கை 32,992 ஆகி உள்ளது.
இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3524 பேர் அதிகரித்து மொத்தம் 74,292 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 121 அதிகரித்து மொத்தம் 2415  பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 24,429 பேர் குணம் அடைந்துள்ளனர்.