வாஷிங்டன்
கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 99,198 உயர்ந்து 46,21,207 ஆகி இதுவரை 3,08,146 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

உலக அளவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 99,198 பேர் அதிகரித்து மொத்தம் 46,21,207 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 5064 அதிகரித்து மொத்தம் 3,08,146 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 17,55,126 பேர் குணம் அடைந்துள்ளனர்.  45,004 பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
அமெரிக்காவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 26,493 பேர் அதிகரித்து மொத்தம் 14,84,086 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 1587 அதிகரித்து மொத்தம் 88,499 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 3,26,228  பேர் குணம் அடைந்துள்ளனர்.  தற்போது 16,135 பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
ஸ்பெயினில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1721  பேர் அதிகரித்து மொத்தம் 2,74,367 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 138 அதிகரித்து மொத்தம் 27,459 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 1,88,967 பேர் குணம் அடைந்துள்ளனர்.  தற்போது 1320  பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
ரஷ்யாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10,598  பேர் அதிகரித்து மொத்தம் 2,62,843 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 113 அதிகரித்து மொத்தம் 2,418 பேர் உயிர் இழந்துள்ளனர்.  தற்போது 2300  பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
பிரிட்டனில் நேற்று 3.560 பேர் பாதிக்கப்பட்டு மொத்தம் 2,36,711 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கு நேற்று 384 பேர் உயிரிழந்து மொத்த எண்ணிக்கை 33,998 ஆகி உள்ளது.
இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3787 பேர் அதிகரித்து மொத்தம் 85,784 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 104 அதிகரித்து மொத்தம் 2753 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 30,258 பேர் குணம் அடைந்துள்ளனர்.