வாஷிங்டன்
கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 94,813 உயர்ந்து 49,82,937 ஆகி இதுவரை 3,24,554 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

உலக அளவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 94,813பேர் அதிகரித்து மொத்தம் 49,82,937 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 4589 அதிகரித்து மொத்தம் 3,24,554 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 19,56,361 பேர் குணம் அடைந்துள்ளனர்.  45,428 பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
அமெரிக்காவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 20,289 பேர் அதிகரித்து மொத்தம் 15,70,583 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 1552 அதிகரித்து மொத்தம் 93,533 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 3,61,180  பேர் குணம் அடைந்துள்ளனர்.  தற்போது 17,249 பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
ரஷ்யாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9,263  பேர் அதிகரித்து மொத்தம் 2,99,941 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 115 அதிகரித்து மொத்தம் 2,837 பேர் உயிர் இழந்துள்ளனர்.  தற்போது 2300  பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
ஸ்பெயினில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 615  பேர் அதிகரித்து மொத்தம் 2,78,803 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 69 அதிகரித்து மொத்தம் 27,778 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 1,96,958 பேர் குணம் அடைந்துள்ளனர்.  தற்போது 1152  பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
பிரேசிலில் நேற்று 16.517 பேர் பாதிக்கப்பட்டு மொத்தம் 2,71,885 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கு நேற்று 1130 பேர் உயிரிழந்து மொத்த எண்ணிக்கை 17,983 ஆகி உள்ளது.
இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6147 பேர் அதிகரித்து மொத்தம் 1,06,475 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 146 அதிகரித்து மொத்தம் 3302 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 42,309 பேர் குணம் அடைந்துள்ளனர்.