வாஷிங்டன்
கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 1,05,767 உயர்ந்து 51,89,178 ஆகி இதுவரை 3,34,072 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

உலக அளவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,05,767 பேர் அதிகரித்து மொத்தம் 51,89,178 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 4833 அதிகரித்து மொத்தம் 3,34,072 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 20,78,557 பேர் குணம் அடைந்துள்ளனர்.  45,635 பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
அமெரிக்காவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 27,734 பேர் அதிகரித்து மொத்தம் 16,20,457 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 1359 அதிகரித்து மொத்தம் 96,295 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 3,82,165  பேர் குணம் அடைந்துள்ளனர்.  தற்போது 17,902 பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
ரஷ்யாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8,849  பேர் அதிகரித்து மொத்தம் 3,17,554 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 127 அதிகரித்து மொத்தம் 3,099 பேர் உயிர் இழந்துள்ளனர்.  தற்போது 2300  பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
பிரேசிலில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 16,730  பேர் அதிகரித்து மொத்தம் 3,10,087 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 1153 அதிகரித்து மொத்தம் 20,047 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 1,25,960 பேர் குணம் அடைந்துள்ளனர்.  தற்போது 8318  பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
ஸ்பெயினில் நேற்று 593 பேர் பாதிக்கப்பட்டு மொத்தம் 2,80,117 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கு நேற்று 52 பேர் உயிரிழந்து மொத்த எண்ணிக்கை 27,940 ஆகி உள்ளது.
இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6198 பேர் அதிகரித்து மொத்தம் 1,18,226 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 150 அதிகரித்து மொத்தம் 3584 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 48,553 பேர் குணம் அடைந்துள்ளனர்.