வாஷிங்டன்
கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 1,25,468 உயர்ந்து 60,26,284 ஆகி இதுவரை 3,66,418 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

உலக அளவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,25,408 பேர் அதிகரித்து மொத்தம் 60,26,375 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 4869 அதிகரித்து மொத்தம் 3,64,418 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 26,56,144  பேர் குணம் அடைந்துள்ளனர்.  53,736 பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
அமெரிக்காவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 25,069 பேர் அதிகரித்து மொத்தம் 17,93,530 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 1212 அதிகரித்து மொத்தம் 1,04,542 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 5,19,569 பேர் குணம் அடைந்துள்ளனர்.  தற்போது 17,204 பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
பிரேசிலில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 29,526  பேர் அதிகரித்து மொத்தம் 4,68,338 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 1120 அதிகரித்து மொத்தம் 27,944 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 1,93,181 பேர் குணம் அடைந்துள்ளனர்.  தற்போது 8318  பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
ரஷ்யாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8,572  பேர் அதிகரித்து மொத்தம் 3,87,623  பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 232 அதிகரித்து மொத்தம் 4,374 பேர் உயிர் இழந்துள்ளனர்.  தற்போது 2300  பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
ஸ்பெயினில் நேற்று 858 பேர் பாதிக்கப்பட்டு மொத்தம் 2,85,544 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கு நேற்று இருவர் உயிரிழந்து மொத்த எண்ணிக்கை 27,121 ஆகி உள்ளது.
இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8105  பேர் அதிகரித்து மொத்தம் 1,73,491 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 269 அதிகரித்து மொத்தம் 4980 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 82,627 பேர் குணம் அடைந்துள்ளனர்.