வாஷிங்டன்

கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 1,08,767 உயர்ந்து 62,59,249 ஆகி இதுவரை 3,73,697 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,08,767 பேர் அதிகரித்து மொத்தம் 62,59,249 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 3191 அதிகரித்து மொத்தம் 3,72,697 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 28,43,998 பேர் குணம் அடைந்துள்ளனர்.  53,409 பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

அமெரிக்காவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 20,350 பேர் அதிகரித்து மொத்தம் 18,37,170 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 638 அதிகரித்து மொத்தம் 1,06,195 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 5,99,867 பேர் குணம் அடைந்துள்ளனர்.

பிரேசிலில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 16,409  பேர் அதிகரித்து மொத்தம் 5,14,849 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 480 அதிகரித்து மொத்தம் 29,314 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 2,06,555 பேர் குணம் அடைந்துள்ளனர்.

ரஷ்யாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9,268  பேர் அதிகரித்து மொத்தம் 4,05,843  பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 138 அதிகரித்து மொத்தம் 4,693 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 1,71,883 பேர் குணம் அடைந்துள்ளனர்.

ஸ்பெயினில் நேற்று 201 பேர் பாதிக்கப்பட்டு மொத்தம் 2,86,509 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கு நேற்று 2 பேர் உயிரிழந்து மொத்த எண்ணிக்கை 27,127 ஆகி உள்ளது.

இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8782  பேர் அதிகரித்து மொத்தம் 1,90,609 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 223 அதிகரித்து மொத்தம் 5408 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 91,852 பேர் குணம் அடைந்துள்ளனர்