கொரோனா: பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 93.45 லட்சத்தை தாண்டியது

வாஷிங்டன்

கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 1,62,994 உயர்ந்து 93,45,569 ஆகி இதுவரை 4,78,949 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,62,994 பேர் அதிகரித்து மொத்தம் 93,45,569 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 5,465 அதிகரித்து மொத்தம் 4,78,949 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 50,36,723 பேர் குணம் அடைந்துள்ளனர்.  57,912  பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

அமெரிக்காவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 36,015 பேர் அதிகரித்து மொத்தம் 24,24,168 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 863 அதிகரித்து மொத்தம் 1,23,473 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 10,20,381 பேர் குணம் அடைந்துள்ளனர்.

பிரேசிலில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 40,131  பேர் அதிகரித்து மொத்தம் 11,51,479 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 1364 அதிகரித்து மொத்தம் 52,771  பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 6,13,345 பேர் குணம் அடைந்துள்ளனர்.

ரஷ்யாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7,425  பேர் அதிகரித்து மொத்தம் 599,705 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 153 அதிகரித்து மொத்தம் 8,359 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 3,45,429 பேர் குணம் அடைந்துள்ளனர்.

இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 15,665  பேர் அதிகரித்து மொத்தம் 4,56,115 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 468 அதிகரித்து மொத்தம் 14,483 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 2,58,574 பேர் குணம் அடைந்துள்ளனர்.

பிரிட்டனில் நேற்று 921 பேர் பாதிக்கப்பட்டு மொத்தம் 3,06,210 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கு நேற்று 280 பேர் உயிர் இழந்து மொத்த எண்ணிக்கை 42,927 ஆக உள்ளது.