சென்னை

சென்னையில் தற்போது கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 200க்கும் குறைவாக அதாவது 1971 பேர் ஆகி உள்ளது.

இன்று தமிழகத்தில் 665 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதுவரை மொத்தம் 8,29,573 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.

இதில் சென்னையில் 180 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதுவரை சென்னையில் 2,28,746 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று 2 பேர் உயிர் இழந்து மொத்தம் 4,059 பேர் மரணம் அடைந்துள்ளனர். இன்று 215 பேர் குணம் அடைந்து மொத்தம் 2,22,716 பேர் குணம் அடைந்துள்ளனர்.

தற்போது சென்னையில் 1,971 பேர் சிகிச்சையில் உள்ளனர். தமிழக கொரோனா பாதிப்பில் சென்னை முதல் இடத்தில் உள்ளது.