மண்டல வாரியாக கொரோனா பாதிப்பு விவரம்

சென்னை

சென்னை மாநகராட்சி மண்டல வாரியாக் கொரோனா பாதிப்பு விவரங்களை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 105 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதில் தலைநகர் சென்னையில் மட்டும் 50 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனால் சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 285 ஆகி உள்ளது.

இதில் நேற்று அதிக அளவில் ராயபுரத்தில் 18 பேருக்குப் பாதிப்பு ஏற்பட்டு மொத்தம் 91 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அடுத்தபடியாக தேனாம்பேட்டையில் 17 பேரும், திருவிக நகர் மற்றும் தண்டையார்ப்பேட்டையில் தலா 4 பேரும், கோடம்பாக்கத்தில் 3 பேரும், ஆலந்தூர் மற்றும் அண்ணாநகரில் தலா இருவரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கார்ட்டூன் கேலரி