டில்லி

ந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணக்கை 2,87,155 ஆக உயர்ந்து 8107  பேர் மரணம் அடைந்துள்ளனர்

 

நேற்று இந்தியாவில் 11,156 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்த எண்ணிக்கை 2,87,155 ஆகி உள்ளது.  நேற்று 357 பேர் உயிர் இழந்து மொத்தம் மரணம் அடைந்தோர் எண்ணிக்கை 8107 ஆகி உள்ளது.  நேற்று 6326 பேர் குணமடைந்து மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 1,40,979 ஆகி உள்ளது.  தற்போது பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,38,054 பேராக உள்ளது.

மகாராஷ்டிராவில் நேற்று 3,254 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 94,041 ஆகி உள்ளது  நேற்று 149 பேர் உயிர் இழந்து மொத்தம் 3,438 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 1877 பேர் குணமடைந்து மொத்தம் 44,516 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

தமிழகத்தில் நேற்று 1,927 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 36,841 ஆகி உள்ளது  இதில் நேற்று 19 பேர் உயிர் இழந்து மொத்தம் 326 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 1008 பேர் குணமடைந்து மொத்தம் 19,333 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

டில்லியில் நேற்று 1501 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 32,810 ஆகி உள்ளது  இதில் நேற்று 79 பேர் உயிர் இழந்து மொத்தம் 984 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 364 பேர் குணமடைந்து மொத்தம் 12,245 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

குஜராத் மாநிலத்தில் நேற்று 510 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 21,554 ஆகி உள்ளது  இதில் நேற்று 34 பேர் உயிர் இழந்து மொத்தம் 1347 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 370 பேர் குணமடைந்து மொத்தம் 14,743 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

உத்தரப் பிரதேச மாநிலத்தில் நேற்று 275 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 11,610 ஆகி உள்ளது  இதில் நேற்று 20 பேர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 321 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 302 பேர் குணமடைந்து மொத்தம் 6971 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.