டில்லி

ந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணக்கை 2,98,283 ஆக உயர்ந்து 8501  பேர் மரணம் அடைந்துள்ளனர்

நேற்று இந்தியாவில் 11,128 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்த எண்ணிக்கை 2,98,283 ஆகி உள்ளது.  நேற்று 393 பேர் உயிர் இழந்து மொத்தம் மரணம் அடைந்தோர் எண்ணிக்கை 8501 ஆகி உள்ளது.  நேற்று 6,044 பேர் குணமடைந்து மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 1,46,972 ஆகி உள்ளது.  தற்போது பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,42,795 பேராக உள்ளது.

மகாராஷ்டிராவில் நேற்று 3,607 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 97,648 ஆகி உள்ளது  நேற்று 152 பேர் உயிர் இழந்து மொத்தம் 3,590 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 1,562 பேர் குணமடைந்து மொத்தம் 46,078 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

தமிழகத்தில் நேற்று 1,875 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 38,716 ஆகி உள்ளது  இதில் நேற்று 23 பேர் உயிர் இழந்து மொத்தம் 349 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 1372 பேர் குணமடைந்து மொத்தம் 20,705 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

டில்லியில் நேற்று 1877 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 34,687 ஆகி உள்ளது  இதில் நேற்று 101 பேர் உயிர் இழந்து மொத்தம் 1085 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 486 பேர் குணமடைந்து மொத்தம் 12,731 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

குஜராத் மாநிலத்தில் நேற்று 813 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 22,067 ஆகி உள்ளது  இதில் நேற்று 38 பேர் உயிர் இழந்து மொத்தம் 1385 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 366 பேர் குணமடைந்து மொத்தம் 15,109 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

உத்தரப் பிரதேச மாநிலத்தில் நேற்று 478 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 12,088 ஆகி உள்ளது  இதில் நேற்று 24 பேர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 345 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 321 பேர் குணமடைந்து மொத்தம் 7,292 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.