டில்லி

ந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,90,609 ஆக உயர்ந்து 5408 பேர் மரணம் அடைந்துள்ளனர்

 

நேற்று இந்தியாவில் 8782 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்த எண்ணிக்கை 1,90,609 ஆகி உள்ளது.  நேற்று 223 பேர் உயிர் இழந்து மொத்தம் மரணம் அடைந்தோர் எண்ணிக்கை 5408 ஆகி உள்ளது.  நேற்று 4921  பேர் குணமடைந்து மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 91,855 ஆகி உள்ளது.  தற்போது பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 89,695 பேராக உள்ளது.

மகாராஷ்டிராவில் நேற்று 2487 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 67,655 ஆகி உள்ளது  நேற்று 89 பேர் உயிர் இழந்து மொத்தம் 2286 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 1248 பேர் குணமடைந்து மொத்தம் 29,329 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

தமிழகத்தில் நேற்று 1149 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 22,323 ஆகி உள்ளது  இதில் நேற்று 13 பேர் உயிர் இழந்து மொத்தம் 176 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 757 பேர் குணமடைந்து மொத்தம் 12757  பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

டில்லியில் நேற்று 1295 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 19,844 ஆகி உள்ளது.  நேற்று 57 பேர் மரணம் அடைந்து  இதுவரை மொத்தம் 473 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 403 பேர் குணமடைந்து மொத்தம் 8478 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

குஜராத் மாநிலத்தில் நேற்று 438 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 16,794 ஆகி உள்ளது  இதில் நேற்று 31 பேர் உயிர் இழந்து மொத்தம் 1038 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 649 பேர் குணமடைந்து மொத்தம் 9919 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

ராஜஸ்தான் மாநிலத்தில் நேற்று 214 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 8,831 ஆகி உள்ளது  இதில் நேற்று 2 பேர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 195 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 293 பேர் குணமடைந்து மொத்தம் 6032 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

இந்தியாவில் தற்போது மிசோரம், அந்தமான் நிகோபார் தீவுகள், ஆகிய பகுதிகள் கொரோனா பாதிப்பற்ற மாநிலங்களாக உள்ளன.