டில்லி

ந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2,65,928 ஆக உயர்ந்து 7473  பேர் மரணம் அடைந்துள்ளனர்

 

நேற்று இந்தியாவில் 8,442 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்த எண்ணிக்கை 2,65,928 ஆகி உள்ளது.  நேற்று 266 பேர் உயிர் இழந்து மொத்தம் மரணம் அடைந்தோர் எண்ணிக்கை 7473 ஆகி உள்ளது.  நேற்று 5247 பேர் குணமடைந்து மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 1,28,095 ஆகி உள்ளது.  தற்போது பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,29,345 பேராக உள்ளது.

மகாராஷ்டிராவில் நேற்று 2554 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 88,529 ஆகி உள்ளது  நேற்று 109 பேர் உயிர் இழந்து மொத்தம் 3169 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 1661 பேர் குணமடைந்து மொத்தம் 40,975 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

தமிழகத்தில் நேற்று 1,562 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 33,299 ஆகி உள்ளது  இதில் நேற்று 17 பேர் உயிர் இழந்து மொத்தம் 289 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 528 பேர் குணமடைந்து மொத்தம் 17,527 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

டில்லியில் நேற்று 1007 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 29,943 ஆகி உள்ளது.  நேற்று 62 பேர் மரணம் அடைந்து  இதுவரை மொத்தம் 874 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 358 பேர் குணமடைந்து மொத்தம் 11,357 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

குஜராத் மாநிலத்தில் நேற்று 477 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 20,574 ஆகி உள்ளது  இதில் நேற்று 31 பேர் உயிர் இழந்து மொத்தம் 1280 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 321 பேர் குணமடைந்து மொத்தம் 13,964 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

உத்தரப் பிரதேச மாநிலத்தில் நேற்று 411 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 10,947 ஆகி உள்ளது  இதில் நேற்று 8 பேர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 288 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 159 பேர் குணமடைந்து மொத்தம் 6344 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

இந்தியாவில் தற்போது அந்தமான் நிகோபார் தீவுகள் பகுதி மட்டும் கொரோனா பாதிப்பற்ற மாநிலமாக உள்ளது.