இந்தியாவில் கொரோனா பாதிப்பு 33 ஆயிரத்தைத் தாண்டியது.

டில்லி

ந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 33 ஆயிரத்துக்கும் மேல் அதிகரித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.

கொரோனாவை கட்டுப்படுத்த மே மாதம் 3ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஆயினும் தொடர்ந்து பாதிப்பு மற்றும் உயிர் இழந்தோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 33,062 ஐ எட்டி உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில்  67 பேர் கொரோனாவால் உயிர் இழந்துள்ளனர்.

மொத்தம் உயிர் இழந்தோர் எண்ணிக்கை 1074 ஐ எட்டி உள்ளது.

இதுவரை 8437 பேர்  குணம் அடைந்துள்ளனர்.

அதிகபட்சமாக மகாராஷ்டிர மாநிலத்தில் 9915 பேர் பாதிப்பு, 432 உயிர் இழப்பு, 1593 குணம்

அடுத்ததாக குஜராத் மாநிலத்தில் 4082 பாதிப்பு , 192 உயிர் இழப்பு, 527 குணம்

மூன்றாவதாக டில்லியில் 3349 பாதிப்பு, 56 மரணம், 1092 குணம்

ஆறாவது இடத்தில் உள்ள தமிழகத்தில் 2162 பாதிப்பு, 27 உயிர் இழப்பு, 1210 குணம்