திருவள்ளூரில் கொரோனா பாதித்தவரின் எண்ணிக்கை 469ஆக உயர்வு… !

சென்னை:

மிழகத்தில் கொரோனா பாதிப்பில் 2வது இடத்தை பெற்றுள்ளது திருவள்ளூர் மாவட்டம். இதற்கு முக்கிய காரணம் கோயம்பேடு மார்க்கெட் என்பது உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் நேற்று மட்டும் 798 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மொத்தம் பாதிப்பு எண்ணிக்கை 8,002 ஆக அதிகரித்துள்ளது. மேலும் தமிழகத்தில் 6 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். இதனால் உயிரிழப்பின் எண்ணிக்கை 53 ஆக அதிகரித்துள்ளது. இதையடுத்து இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,051ஆக அதிகரித்துள்ளது.

திருவள்ளூரில்  நேற்று  97 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 440ஆக உயர்ந்திருந்தது. இன்று மேலும் 29 பேருக்கு உறுதியானதைத் தொடர்ந்து, மொத்த பாதிப்பு எண்ணிக்கை 469 ஆக அதிகரித்து உள்ளது. இதில் 374 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நோய்தொற்று பாதிக்கப்பட்டவர்களில் 200 பேர் கோயம்பேடு மார்க்கெட் தொடர்புடையவர்கள் என்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.

கார்ட்டூன் கேலரி