கொரோனா : தமிழகத்தில் மாவட்டவாரியான பாதிப்பு விவரம்

சென்னை

மிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு மாவட்டவாரியான விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்பு வரலாறு காணாத அளவுக்கு 1149 உறுதி ஆகி உள்ளது.

இதில் சென்னையில் மட்டும் 804 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.

தமிழகத்தில் மொத்தம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 22333 ஆகி உள்ளது.

இதில் சென்னையில் இதுவரை 14802 பேர் பாதிக்கப்பட்டு 129 பேர் உயிர் இழந்து 7891 பேர் இதுவரை குணம் அடைந்துள்ளனர்.

அடுத்ததாக செங்கல்பட்டு மாவட்டத்தில் 1177 பேர் பாதிக்கப்பட்டு 11 பேர் உயிர் இழந்து 610 பேர் குணம் அடைந்துள்ளனர்.

மூன்றாவதாக திருவள்ளூர் மாவட்டத்தில் 948 பேர் பாதிக்கப்பட்டு 11 பேர் உயிர் இழந்து 603 பேர் குணம் அடைந்துள்ளனர்.

மொத்தம் உயிர் இழந்தோர் எண்ணிக்கை 173 ஆகவும்12757 பேர் குணம் அடைந்து 9400 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தற்போது கோவை, நாமக்கல், நீலகிரி, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் ஒருவர் கூட இல்லை.

கார்ட்டூன் கேலரி