கொரோனா மரணத்தை 12 நாட்களாக மறைத்த தமிழக அரசு

சென்னை

மிழகத்தில் இதுவரை 111 பேர் மரணமடைந்ததில் 8 பேர் விவரங்களை வெளியிடாமல் தமிழக அரசு மறைத்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது

கடந்த 24 மணி நேரத்தில் 768 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.

பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 16,227 பேர் ஆகி உள்ளது.

இதில் சென்னையில் இன்று 587 பேர் பதிக்கப்பட்டுள்ளனர்.

இதுவரை சென்னையில் 10,576 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.

இன்று 833 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

குணமடைந்தோர் எண்ணிக்கை 8324 ஆகி உள்ளது.

இன்று கொரோனாவால் 8 பேர் மரணம் அடைந்து மொத்தம் 111 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று மரணம் அடைந்த 8 பேரில் மே 10 ஆம் தேதி ஒருவரும் 11 ஆம் தேதி 5 பேரும் 12 ஆம் தேதி 2 பேரும் ஆவார்கள்.

அரசு ஏன் 12 நாட்களாக இந்த மரணமடைந்தோர் குறித்த தகவல்களை  தெரிவிக்காமல் இருந்தது என்பதற்கான காரணங்கள் அறிவிக்கப்படவில்லை.

You may have missed