தமிழகம் : கொரோனா பாதிப்பு 25000 ஐ தாண்டி உள்ளது

சென்னை

ன்று ஒரே நாளில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 1286 உயர்ந்து மொத்தம் 25,872 ஆகி உள்ளது.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1286 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம் மொத்தம் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 25,872 ஆகி உள்ளது.

பாதிப்படைந்தோரில் 1437 பேர் 12வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் ஆவார்கள்

இன்று 11 பேர் மரணம் அடைந்து மொத்தம் 208 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 610 பேர் குணமடைந்து இதுவரை 14,316 பேர் குணமடைந்துள்ளனர்.

இன்று 14101 மாதிரிகள் சோதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்ட நிலையில் எத்தனை பேருக்குச் சோதனை நடந்தன என்பதை அரசு தெரிவிக்கவில்லை.

இதுவரை 5,28,534 மாதிரிகள் சோதிக்கப்பட்டுள்ளன.

இன்று சென்னையில் மட்டும் 1012 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னையில் ஆயிரத்தைத் தாண்டியது இதுவே முதல் முறையாகும்.

இன்று வரை சென்னையில் மட்டும் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 17,598 ஆகி உள்ளது.

கார்ட்டூன் கேலரி