தமிழகம் : கொரோனா பாதிப்பு 46000 ஐ கடந்தது

--

சென்னை

மிழகத்தில் இன்று 1843 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மொத்தம் 46,504 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் இன்று 1843 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதில் தமிழகத்துக்கு வெளியில் இருந்து வந்தோர் 54 பேர் ஆவார்கள்

மொத்தம் கொரோனாவால்  பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 46504 ஆகி உள்ளது.

இன்று 44 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இதுவரை கொரோனாவால் 479 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 797 பேர் குணம் அடைந்து மொத்தம் 25,344 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

சென்னையில் இன்று 1257 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.

சென்னையில் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 33244 ஆகி உள்ளது.