வாஷிங்டன்
கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 82,257 உயர்ந்து 47,99,266 ஆகி இதுவரை 3,16,519 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

உலக அளவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 82,257 பேர் அதிகரித்து மொத்தம் 47,99,266 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 3617 அதிகரித்து மொத்தம் 3,16,519 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 18,56,566 பேர் குணம் அடைந்துள்ளனர்.  44,823 பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
அமெரிக்காவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 19,891 பேர் அதிகரித்து மொத்தம் 15,27,664 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 885 அதிகரித்து மொத்தம் 90,978 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 3,46,389  பேர் குணம் அடைந்துள்ளனர்.  தற்போது 16,355 பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
ரஷ்யாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9,709  பேர் அதிகரித்து மொத்தம் 2,81,752 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 94 அதிகரித்து மொத்தம் 2,631 பேர் உயிர் இழந்துள்ளனர்.  தற்போது 2300  பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
ஸ்பெயினில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1214  பேர் அதிகரித்து மொத்தம் 2,77,719 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 94 அதிகரித்து மொத்தம் 27,650 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 1,95,945 பேர் குணம் அடைந்துள்ளனர்.  தற்போது 1152  பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
பிரிட்டனில் நேற்று 3.534 பேர் பாதிக்கப்பட்டு மொத்தம் 2,43,695 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கு நேற்று 170 பேர் உயிரிழந்து மொத்த எண்ணிக்கை 34,34636 ஆகி உள்ளது.
இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5050 பேர் அதிகரித்து மொத்தம் 95,698 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 154 அதிகரித்து மொத்தம் 3025 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 36,795 பேர் குணம் அடைந்துள்ளனர்.