கடந்த சில வாரங்களாக இல்லாத அளவுக்கு இத்தாலியில் கொரோனா பாதிப்பு கு

ரோம்

இத்தாலி நாட்டில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்து வருகிறது.

சீனாவின் வுகான் நகரில் தொடங்கிய கொரோனா தொற்று உலகெங்கும் வேகமாகப் பரவி வருகிறது.

கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில் சீனாவுக்கு அடுத்தபடியாக இருந்த இத்தாலி சீனாவையும் தாண்டி முதல் இடத்துக்கு வந்தது.

அதன் பிறகு அமெரிக்காவில் பாதிப்பு அதிகரித்தது.

ஆயினும் இத்தாலியிலும் தொடர்ந்து பாதிப்புக்கள் அதிகரித்ததால் இரண்டாம் இடத்தில் இருந்தது.

கடந்த சில நாட்களாக இத்தாலியில் பாதிப்பு மற்றும் உயிர் இழந்தோர் எண்ணிக்கை குறைந்து வருகிறது.

கடந்த 24 மணி நேரத்தில் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 2256 ஆக உள்ளது.

அதைப் போல் கடந்த 24 மணி நேரத்தில் 454 பேர் உயிர் இழந்துள்ளனர்.

கடந்த சில வாரங்களாக இல்லாத அளவுக்கு இது மிகவும் குறைவான எண்ணிக்கையாகும்.

இத்தாலியில் இதுவரை கொரோனாவால் 1,81,228 பேர் பாதிக்கப்பட்டு 24,114 பேர் உயிர் இழந்துள்ளனர்.