இந்தியாவில் 50ஆயிரத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு…

டெல்லி:

ந்தியாவில் கரோனா பாதிப்பு 50 ஆயிரத்தை நெருங்குகிறது. இன்றுகாலை 9மணி நிலவரப்படி மொத்த பாதிப்பு  49,391 ஆக உயர்ந்துள்ளது. பலி எண்ணிக்கை 1,694 ஆக அதிகரித்து உள்ளது.

கொரோனா பாதிப்பு குறித்து மத்திய சுகாதாரத்துறைச் சார்பில் வெளியிடப்பட்டுள்ள தகவலில்,  இந்தியாவில் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 49,391-ஆக அதிகரித்துள்ளது உயிரிழந்தோா் எண்ணிக்கை 1,694-ஆக அதிகரித்துள்ளது.

மேலும், இதுவரை 14,182 போ் நோய்த்தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பி இருப்பதாகவும், மேலும்  33,514  பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும் குறிப்பிடப்பட்டு உள்ளது.

பலி எண்ணிக்கை  1,694 பேர் அதிகரித்து இருப்பதாகவும், மொத்த பலி எண்ணிக்கையில், மகாராஷ்டிரம் தொடா்ந்து முதலிடத்தில் உள்ளது. அங்கு இதுவரை 617  பேர் உயிரிழந்துள்ளனர். 15,525 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுஉளளது. அடுத்தடுத்த இடங்களில் குஜராத் உள்ளது. இங்கு கரோனா உறுதி செய்யப்பட்டோா் எண்ணிக்கை 6,245 ஆகும். தில்லியில் 5,104 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களின் பட்டியலில் தேசிய தலைநகர் டில்லி மூன்றாவது இடத்திலும், தமிழகம் 5வது இடத்திலும்  உள்ளது