கொரோனா பாதிப்பு? ஐதராபாத் அப்போலோ மருத்துவமனையில் ரஜினி அனுமதி….

சென்னை:  நடிகர் ரஜினிகாந்த் ஐதராபாத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாக  தகவல் வெளியாகி உள்ளது.

ஐதராபாத்தில் நடைபெற்ற அண்ணாத்தபடப்பிடிப்பின்போது, படக்குழுவினர் பலருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், ரஜினி தனிமைப்படுத்தப்பட்டு இருப்பதாக செய்தி வெளியானது.  முதல்கட்ட  சோதனையில், கொரோனா நெகடிவ் என ரிசல்ட் வந்த நிலையில், மீண்டும் நேற்று இரவு ரஜினிக்கு கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டதாக கூறப்பட்டது.

இந்தநிலையில், ரஜினி ஐதராபாத்தில் உள்ள  அப்போலோ மருத்துவமனையில்  சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் தயாரிப்பில், இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் , ரஜினி நடிப்பில் ‘அண்ணாத்த’ படம் உருவாகி வருகிறது. இந்த  படத்தின் படக்குழுவினர்  8 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதையடுத்து,  படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், படப்பிடிப்பில் கலந்துகொண்ட அனைவருக்கும் தொற்று சோதனை மேற்கொள்ளப்பட்டது.

ரஜினிக்கும் கொரோனா டெஸ்ட் எடுக்கப்பட்ட நிலையில், அவருக்கு தொற்று இல்லை என்றும், நெகடிவ் என்று சோதனை முடிவு வந்துள்ளதாகவும் தகவல் வெளியானது. இருந்தாலும், அவர்  தனிமைப்படுத்தப்பட்டு இருப்பதாக கூறப்பட்டது. இந்த நிலையில், அவருக்கு மீண்டும் கொரோனா சோதனை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி  உள்ளது.

மீண்டும் டெஸ்ட் எடுக்க முடிவு செய்யப்பட்டு இருப்பதாக நேற்று தகவல் வெளியானது. இந்தநிலையில், ரஜினி ஐதராபாத்தில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

ரஜினிக்கு கொரோனா நெகடிவ் என்றாலும், அவருக்கு ரத்தஅழுத்தம்ஏற்றம் இறக்கமாக இருந்து வருவதால்,  அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாக  தெரிவித்து உள்ளது.