ஓமனிலிருந்து சென்னை திரும்பிய தமிழருக்கு கொரோனா! சென்னை மருத்துவமனையில் சிகிச்சை….

டெல்லி:

மன் நாட்டிலிருந்து சென்னை திரும்பிய தமிழருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு அறிகுறி தென்பட்ட நிலையில், அவர்  சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இது சென்னைவாசிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஈரானுக்கு சென்று வந்த லடாக்கைச் சேர்ந்த இருவர் மற்றும் ஓமனில் இருந்த தமிழகத்துக்கு வந்த ஒருவர் என மூன்று பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டு இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது. இதனால் இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 34 ஆக உயர்ந்துள்ளது.

புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட 3 பேரின் உடல் நிலையும் சீராக உள்ளதாக மத்திய காதாரத்துறை சிறப்புச் செயலர் சஞ்சீவ் குமார் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கூறிய தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், கொரோனா தொற்று குறித்து யாரும் அச்சப்பட வேண்டாம். தற்போது சிகிச்சையில் உள்ள 45 வயதுடைய நபர் நலமாக உள்ளார்.  கொரோனா தொற்று பரவலை தடுக்க தமிழக சுகாதார துறை தயார் நிலையில் உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.