வாஷிங்டன்
கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 91,977 உயர்ந்து 56,78,033 ஆகி இதுவரை 3,51,667 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

உலக அளவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 91,977 பேர் அதிகரித்து மொத்தம் 56,78,033 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 4054 அதிகரித்து மொத்தம் 3,51,667 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 24,16,570  பேர் குணம் அடைந்துள்ளனர்.  53,096 பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
அமெரிக்காவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 18,966 பேர் அதிகரித்து மொத்தம் 17,25,192 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 774 அதிகரித்து மொத்தம் 1,00,579 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 4,78,407 பேர் குணம் அடைந்துள்ளனர்.  தற்போது 17,153 பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
பிரேசிலில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 15,691  பேர் அதிகரித்து மொத்தம் 3,92,360 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 1027 அதிகரித்து மொத்தம் 24,549 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 1,58,593 பேர் குணம் அடைந்துள்ளனர்.  தற்போது 8318  பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
ரஷ்யாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8,915  பேர் அதிகரித்து மொத்தம் 3,62,342  பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 174 அதிகரித்து மொத்தம் 3,807 பேர் உயிர் இழந்துள்ளனர்.  தற்போது 2300  பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
ஸ்பெயினில் நேற்று 859 பேர் பாதிக்கப்பட்டு மொத்தம் 2,83,339 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கு நேற்று 280 பேர் உயிரிழந்து மொத்த எண்ணிக்கை 27,117 ஆகி உள்ளது.
இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5843  பேர் அதிகரித்து மொத்தம் 1,50,793 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 172 அதிகரித்து மொத்தம் 4344 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 64,277 பேர் குணம் அடைந்துள்ளனர்.