சென்னை

கொரோனாத் தொற்று காரணமாக அடையாறு புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனத்திற்கு வழங்கப்படும் நன்கொடை தடைபட்டுள்ளதாகவும்,  பணியாளர்களும் குறைந்த எண்ணிக்கையில் வருவதாகவும் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

“புற்றுநோய்க்கு சிகிச்சை அளித்து வந்த பல தனியார் மருத்துவமனைகள் தற்போது மூடப்பட்டுள்ளதால் அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை முன்பைவிட 20 சதவீதம் அதிகரித்துள்ளதாக” மருத்துவ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மேலும் இதன் தலைவர் மருத்துவர் சாந்தா கூறுகையில்,  நன்கொடையாக 40 முதல் 50 லட்சம் வரை இந்த மருத்துவமனைக்கு அளிப்பர்.  தற்போது கொரோனா தடுப்பு நடவடிக்கைகாக முதல்வர் மற்றும் பிரதமரின் நிவாரண நிதிக்கு நன்கொடை அளிப்பதால் தங்கள் மருத்துவமனையின்  நன்கொடை குறைந்து விட்டதாக தெரிவித்தார்.

மேலும் கீமோதெரபி சிகிச்சைக்காக  அண்டை மாநிலத்தவர் பலரும் இங்கு வருகின்றனர். மருந்து செலவிற்கு மாதம் 2 கோடி வரை செலவாகிறது. கொரோனாவால் வழக்கமாக வரக்கூடிய பணியாளர்களின் எண்ணிக்கையும் தற்போது மிகவும் குறைந்துள்ளது” எனக் கூறினார்.

இதுவரை உலகளவில் கொரோனாவால் 114000 க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.