சென்னை: 
மிழகத்தில் கொரோனா பரவல் தீவிரமடைந்து வரும் நிலையில், கடந்த 9ந்தேதி முதல்  இன்று (29ந்தேதி)  வரை விமானம் மூலம் தமிழகத்திற்கு வந்தவர்கள் எத்தனை பேர், அவர்களில் கொரோனா பாதிக்கப்பட்டோர் எத்தனை பேர், தனிமைப்படுத்துதலில் உள்ளவர்கள் எத்தனை பேர் என்ற விவரங்களை தமிழக அரசு வெளியிட்டு உள்ளது.

அதன்படி, கடந்த 9ந்தேதி முதல் 29ந்தேதி வரை வெளிநாடுகளில் இருந்து சென்னை விமான நிலையம் வந்த பயணிகள்  2236 பேர், திருச்சி விமான நிலையம் வந்தவர்கள்  184 பேர் ஆக மொத்தம் 2420 பேர் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இவர்களில் 2392 பேருக்கு கொரோனா தொற்று சோதனை நடத்தப்பட்டு உள்ளது.
இதில் 2351 பேருக்கு கொரோனா நெகடிவ் என்று சோதனை முடிவுகள் வந்துள்ளன.
41 பேர் விமான நிலையத்திற்கு வரும்போது செய்யப்பட்ட தெர்மல் பரிசோதனையின்போது கொரோனா பாசிடிவ் என தெரிய வந்ததால், அவர்கள் அனைவரும்  தனிமைப்படுத்தப்பட்டதாகவும்,
45 பேர் கொரோனா பாசிடிவிலிருந்து குணமடைந்து திரும்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இவர்கள் அனைவரும் குவைத், துபாய், கோலாலம்பூர், மஸ்கட், சிகாகோ, லன்டன், மியான்மர், மொரிசியஸ், தாகா நாடுகளில் இருந்து தமிழகம் திரும்பியவர்கள்.