கொரோனா: குழந்தைகளை பாதிக்கும் தொடர்புடைய கடுமையான நோய்கள்

--

கொரோனா பாதிப்புடைய குழந்தை நோயாளிகளில், இன்ஃப்லமேஸன் – INFLAMATION எனப்படும் வலி மற்றும் வீக்கம் கொண்ட அறிகுறிகளுடன் கூடிய புதியவகை நச்சுத் தாக்குதல் உடல்நல ஸ்தம்பிப்பு நோய் தொகுப்பு – new type of toxic shock syndrome –க்கான அறிகுறிகள் இங்கிலாந்தில் கண்டறியப்பட்டுள்ளது.

இங்கிலாந்தில், 12-க்கும் அதிகமான குழந்தைகள் கோவிட் -19 உடன் தொடர்புடைய அபாயகரமான, எரிச்சலுடன் கூடிய வயிற்றுபுண், இதயம் சார்ந்த குறைபாடுகளுடன் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட குழந்தைகள் ஒரு புதிய வகை நச்சுத் தாக்குதல் உடல்நல ஸ்தம்பிப்பு நோய் தொகுப்பு – new type of toxic shock syndrome நோயால் தாக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. அனைவருக்கும் தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட வேண்டிய அளவுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. குறைந்த பட்சம் ஒருவர் கூடுதல் கார்போரல் மெம்பிரேன் ஆக்ஸிஜனேற்றம் (ஈ.சி.எம்.ஓ) சிகிச்சையைப் மேற்கொள்ள வேண்டிய நிலையில் உள்ளார். இந்த சிகிச்சை, மேற்கொண்டு தன்னிச்சையாக சுவாசிக்க இயலாத நிலையில் இருப்பவர்களுக்கு மட்டுமே கொடுக்கப்படும் செயல்முறை ஆகும். தேசிய சுகாதார அமைப்பின் தலைவர் நாட்டின் அனைத்து மருத்துவர்களுக்கும், இதே மாதிரியான அறிகுறிகள் கொண்ட குழந்தைகளைக் கண்டறிந்து அறிக்கையளிக்க வேண்டுகோள் விடுத்துள்ளார். பாதிக்கப்பட்ட குழந்தைகளில் பெரும்பாலானவர்கள் கவாசாகி நோயைக் கொண்டுள்ளனர். கவாசாகி என்பது ஒரு அரிய வகை இதய நோய் ஆகும். இது இங்கிலாந்தில் 18 வயதிற்குட்பட்டவர்களில் உண்டாகும் பெறப்பட்ட  இதய நோய்கள் உண்டாவதற்கு இந்த கவாசாகி நோயும் ஒரு முக்கிய காரணமாகும். 18 வயதிற்குட்பட்ட ஒவ்வொரு 100,000 குழந்தைகளுக்கும் 4.5 குழந்தைகள் இந்த வகை அரிய நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். “கவாசாகி நோயால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு கோவிட் -19 வரும்போது இது ஏற்படுகிறது. இதனால் மேலும் இதயம் சார்ந்த சிக்கல்களை உருவாகிறது” என்று தேசிய சுகாதார அமைப்பு மேலும் கூறியுள்ளது. இது மட்டும் இன்றி, கடந்த சில வாரங்களாக லண்டன் மற்றுன் இங்கிலாந்தின் பல பகுதிகளில், இதய அறைகளில் அழற்சி போன்ற சார்ந்த குறைபாடுகளுடன் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை சீராக உயர்ந்து வருவதாகவும் அறிக்கை வெளியிட்டுள்ளது.

ஒரு புதிய வகை நச்சுத் தாக்குதல் உடல்நல ஸ்தம்பிப்பு நோய் தொகுப்பு மற்றும் கவாசாகி நோயுடன் ஒத்த அறிகுறிகள் கொண்ட, கடுமையான கோவிட் -19 தொற்றுடன் கூடிய குழந்தை நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதன் காரணம் இன்னும் அறியப்படவில்லை. கோவிட்-19 நோயினால் உண்டான அறியப்படாத விளைவாகவும் இருக்கலாம் அல்லது வேறொரு இன்னும் கண்டறியப்படாத புதியதொரு நோய் கிருமியின் தாக்குதலாகவும் இருக்கலாம் என்றொரு அதிர்சிகரமான கோணத்தை யூகித்து எச்சரித்துள்ளது குழந்தை தீவிர சிகிச்சை பிரிவுகள் சங்கம். மேலும், இங்கிலாந்து மருத்துவமனைகளில் உள்ள குழந்தை தீவிர சிகிச்சை பிரிவுகளில் பணிபுரியும் அனைத்து சிறப்பு மருத்துவர்களுக்கும் அனுப்பி எச்சரிக்கையாக கண்காணிக்கவும் அறிவுறுத்தியுள்ளது. இதுவரை அனுமதிக்கப்பட்டுள்ள குழந்தைகளில் சிலருக்கு கொரோனா உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சிலருக்கு கொரோனா பாதிப்பு  இல்லை. எனவே இதுவரை கண்டறியப்பட்ட முடிவுகளில் இருந்து, அக்குழந்தைகள் ஏற்கனவே பாதிக்கப்பட்டு குணமடைந்திருக்கலாம் அல்லது தற்போதைய முடிவுகள் தவறானதாக இருக்கலாம் என்று யூகிக்கின்றனர். ஏனெனில், இக்குழந்தைகளின் இரத்த பரிசோதனைகள் கொரோனா தொற்று இருந்ததற்கான அறிகுறிகளைக் கொண்டுள்ளது. எனவே மேற்குறிப்பிட்ட அறிகுறிகள் மற்றும் உடல் நலக் கோளாறுகளைக் கொண்ட குழந்தை நோயாளிகளை கவனமாக பார்த்து அறிக்கை அளிக்க வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

லண்டனில், தீவிர சிகிச்சை பிரிவு மருத்துவர் ஒருவர் இதைப்பற்றி கூறியுள்ளதாவது, “கடுமையான நோய்வாய்ப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை முற்றிலும் எதிர்பாராதவகையில் உயர்ந்து வருகிறது.  இந்த குழந்தைகளில் காணப்படும் இதய அறை அழற்சி கண்டிப்பாக கோவிட் -19 உடன் தொடர்புடையது என்று நாங்கள் கருதுகிறோம். இது மிகவும் அசாதாரணமானது.” என்றார். இதுவரை பதிவு செய்யப்பட்ட தொடர்புடைய மரணங்கள் ஏதுமில்லை. லண்டனில் உள்ள செயின்ட் மேரி மருத்துவமனையின் ஆலோசகரும், ராயல் காலேஜ் ஆஃப் பீடியாட்ரிக்ஸ் அண்ட் சைல்ட் ஹெல்த்ஸின் ஒவ்வாமை, நோயெதிர்ப்பு மற்றும் தொற்று நோய்கள் குழுவின் உறுப்பினருமான டாக்டர் லிஸ் விட்டேக்கர் கூறுகையில், “இது மக்கள் பீதியடைய வேண்டியதில்லை”. என்றார். மேற்குறிப்பிட்ட, மருத்துவ அறிக்கைகள் குறித்து டவுனிங் ஸ்ட்ரீட் தினசரி பத்திரிகையாளர் சந்திப்பில் கேட்டபோது, ​​சுகாதார செயலாளர் மாட் ஹான்காக், “இது கவலைப்படக் கூடிய செய்தி” என்றார். இதுகுறித்து பேசிய அரசாங்கத்தின் தலைமை மருத்துவ அதிகாரி பேராசிரியர் கிறிஸ் விட்டி “இது மிகவும் அரிதான சூழ்நிலை. இந்த கொரோனாவினால் இது ஏற்படுகிறது என்பது முற்றிலும் நம்பத்தகுந்ததாகவே நான் கருதுகிறேன். நச்சு அதிர்ச்சி மற்றும் கவாசாகி நோய் அறிகுறிகளுடன் குழந்தைகள் தொடர்ச்சியாக தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டதால் இந்த அசாதாரண நிலையைப் பற்றி நமக்கு தெரியவந்துள்ளது. இந்தக் குழந்தைகளுக்கு தொடர்ச்சியான காய்ச்சல் மற்றும் கடுமையான வயிற்று வலி மற்றும் சிலருக்கு தோல் வெடிப்பு இருந்தது. கடுமையான கோவிட் -19 நோய்த்தொற்றுகளுடன் அனுமதிக்கப்பட்ட பெரியவர்களுக்கு இருந்ததைப் போலவே, இவர்களுக்கும் சில இரத்த பரிசோதனை முடிவுகள் வந்துள்ளதாக,” கூறினார்.

தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்ட குழந்தைகளில், இதய அழற்சிக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. “எங்கள் கவலை என்னவென்றால், காய்ச்சல் மற்றும் வயிற்று வலி உள்ள குழந்தைகளைப் பார்க்கும் குழந்தை மருத்துவர்கள் குடல் அழற்சி போன்ற பிரச்சினைகளாக இருக்கலாம் என்று கருதி இரத்த பரிசோதனைகள் செய்வார்கள். ஆனால் உண்மையில் அழற்சி பற்றி அறிவதற்கு பதிலாக, அவர்கள் கோவிட்-19 க்கு பரிசோதிக்க வேண்டும். ஏனெனில், தற்போது நான் காணும் அழற்சி ஒரு கடுமையான வைரஸ் தொற்றுக்கு பிறகான விளைவுகளாக இருக்கலாம்” என்று விட்டேக்கர் கூறினார். இந்தக் குழந்தைகள் தற்போது கொரோனா உறுதிப்படுத்தப்படவில்லை என்பதால், இவர்களுக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டு குணமடைந்திருக்கலாம் அல்லது பரிசோதனை முடிவு தவறாக இருக்கலாம் என்பதே தற்போது ஏற்றுக் கொல்லக் கூடிய விளக்கமாக இருக்கிறது,” என்று ராயல் காலேஜ் ஆப் பீடியாட்ரிக்ஸ் அண்ட் சைல்ட் ஹெல்த் தலைவரான பேராசிரியர் ரஸ்ஸல் வினர் பெற்றோருக்கு உறுதியளிகிறார்.

“கோவிட் -19 காரணமாக மிகக் குறைந்த எண்ணிக்கையிலான குழந்தைகள் கடுமையாக நோய்வாய்ப்படக்கூடும் என்பதை நாங்கள் ஏற்கனவே அறிவோம். ஆனால் தற்போதைய நிலை அதற்க்கு எதிராகவும், மிகவும் அரிதானதாக உள்ளது. இந்த தொற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களில், ஒரு பகுதி குழந்தைகள் ஆவர். இது போன்ற புதிய நோய்கள் நாம் எதிபாராத வகையில் தாக்கும். இது போன்ற குறிப்பிடத்தக்க அறிகுறிகள் மற்றும் வைரஸ் எற்பத்தக்கூடிய சாத்தியமான விளைவுகள் குறித்து மருத்துவர்களுக்கும் உரிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். எவ்வாறாயினும், நாங்கள் பெற்றோர்களுக்கு கூற விரும்புவது என்னவெனில், தற்போதைய நிலைமையின்படி, குழந்தைகள் கோவிட் -19 உடன் தீவிரமாக நோய்வாய்ப்பட வாய்ப்பில்லை என்று உறுதியளிக்கிறோம். இருந்தாலும், தங்கள் குழந்தைகளின் உடல்நலம் குறித்து அக்கறையுடன் இருப்பதுடன், தேவைப்பட்டால், அவர்கள் ஒரு சுகாதார நிபுணரின் அல்லது மருத்துவரின் உதவியை நாட வேண்டும். ” என்பதே ஆகும் என்றார். இது நாம் அனைவரும் குழந்தைகளின் உடல் நலன் குறித்து விழிப்புடன் இருக்க வேண்டிய நேரம் ஆகும்!!!!

தமிழில்: லயா