கொரோனா : முன்னாள் பிரதமர் தேவகவுடா பேரன் திருமண ஏற்பாடுகள் மும்முரம்

மணகரா, கர்நாடகா,

முன்னாள் பிரதமர் தேவே கவுடாவின் பேரனும் முன்னாள் கர்நாடக முதல்வர் குமாரசாமியின் மகனுமான நிகில் குமாரசாமியின் திருமணம் நாளை மறுநாள் நடைபெற உள்ளது.

முன்னாள் பிரதமர் தேவே கவுடாவின் பேரனும் முன்னாள் கர்நாடக முதல்வர் குமாரசாமியின் மகனுமான நிகில் குமாரசாமி கன்னட திரை உலகின் பிரமுகர் ஆவார்.  இவர் நடிகரும் தயாரிப்பாளரும் ஆவார். சுமார் 30 வயதாகும் இவருக்கும் ரேவதி என்னும் பெண்ணுக்கும் ஏப்ரல் 17  ஆம் தேதி திருமணம் நடைபெற உள்ளது.

கொரோனா பாதிப்பால் தற்போது இந்த திருமணம் எளிய முறையில் பெங்களூருவில் உள்ள பெண்ணின் விட்டில் நடைபெறும் எனக் கூறப்பட்டுள்ளது.  மேலும் அந்த திருமண நிகழ்வில் குடும்ப உறுப்பினர்கள் மட்டும் கலந்துக் கொள்ள உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலத்தில் உள்ள ரமணகரா என்னும் இடத்தில் தேவே கவுடா குடும்பத்தினருக்குச் சொந்தமான பண்ணை வீடு அமைந்துள்ளது.  அதில் கொரோனா அச்சுறுத்தலையும் மீறி திருமண ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகின்றன.

You may have missed