டில்லி

ற்போதைய நிலைப்படி இந்தியாவில் மொத்தம் 137 பேர் கொரோனாவால் பாதிப்பு அடைந்துள்ளனர்.

உலகெங்கும் பரவி வரும் கொரோனா வைரஸ் தாக்குதலால் 7000 பேருக்கு மேல்ம்ரணம் அடைந்துள்ளனர்.  உலகில் உள்ள 145 நாடுகளில் 181500 பேர் பாதிக்கபட்டுள்ளனர்.   சீனாவுக்கு அடுத்தபடியாக இத்தாலியில் அதிகம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.   பல நாடுகளில் 5க்கும் மேற்பட்டோர் கூட தடை விதிக்கபட்டுள்ளது.   அமெரிக்காவில் ஒரு பெண்ணுக்கு தடுப்பூசி போடப்பட்டு சோதனை நடந்து வருகிறது/

இந்திய மருத்துவக் குழு ஆய்வு அறிக்கையின்படி இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கும் இன்னும் 2 ஆம் இடத்தில் உள்ளதால் அபாயம் குறைவாக உள்ளதாக சொல்லப்படுகிறது.   நாடெங்கும் 72 சோதனைச் நிலையங்கள் புதிதாக இன்று திறக்கப்பட்டுள்ளது.   இதை தவிர தனியார் சோதனை நிலையஙளும்  சேவையில் ஈடுப்டுத்தப்பட்டுள்ளது.

இன்று நடந்த சோதனையில் 500 பேருக்கு பாதிப்பில்லை என தெரிய வந்துள்ளது.   இந்தியாவில் இதுவரை மொத்தம் 137 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  அதில் மூவர் மரணம் அடைந்துள்ளனர்.  இவர்களில் இன்று மரணம் அடைந்தவர் மகாராஷ்டிரா மாநிலத்தி சேர்ந்தவர் ஆவார்.  சுமார் 64 வயதாகும் இவ்ர் துபாயில் இருந்து வந்துள்ளார்.   இந்தியாவில் மகாராஷ்டிர மாநிலத்தில் அதிகம் பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.