தென் சென்னையில் ஆட்டோ மூலம் நூதன கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரம்

சென்னை

தென் சென்னை பகுதியில் ஆட்டோ மூலம் கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெறுகிறது.

கொரோனா பரவுவதைத் தடுக்க சென்னை மாநகரில் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.   ஆயினும் தமிழ்நாட்டில் சென்னை மாவட்டம் அதிக கொரோனா பாதிக்கப்பட்டுள்ளது.  இதையொட்டி சென்னை மாநகரில் கொரோனா குறித்த விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

தென் சென்னை தெருக்களில் கொரோனா வைரஸ் போல அலங்கரிக்கப்பட்ட ஆட்டோ மூலம் கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரம் நடந்து வருகிறது.  அந்த ஆட்டோவில் அனைவரையும் முகக் கவசம் அணியும்படி அறிவிக்கப்பட்டு முகக் கவசம் அணியாதோருக்கு ரூ.100 அபராதம் விதிக்கப்படுகிறது.

அத்துடன் ஒவ்வொருவருக்கும் துணியால் செய்யப்பட்ட 4 முகக் கவசங்கள் வழங்கி இனி மீண்டும் இந்த  தவற்றைச் செய்யாமல் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.   இந்த ஆட்டோ பிரச்சாரம் மக்களை மிகவும் கவர்ந்துள்ளது.   இந்த நிகழ்வு வீடியோ படமாகி சமூக வலைத் தளங்களில் வைரலாகி வருகிறது.