சென்னை: கொரோனா வைரஸ் பரவல் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக, பிரபல நாடக இயக்குநர் டி.வி.வரதராஜன் தயாரித்த குறும்படம் வைரலாக பரவி வருகிறது.

தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. இதன் ஒரு பகுதியாக பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தயாரித்து வெளியிடப்படுகின்றன.

பொதுநல நோக்கில் பலதரப்பாரும் கொரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி, தங்கள் பங்கிற்கு வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர்.

இந்நிலையில், பிரபல நாடக இயக்குனரும் தயாரிப்பாளருமான டி.வி.வரதராஜன் கொரோனா விழிப்புணர்வு பற்றி ஒரு குறும்படத்தை தயாரித்துள்ளார்.
‘விழித்திருங்கள்; விழிப்புடன் இருங்கள்; வீட்டிலேயே இருங்கள்’ என்பதை மையப்படுத்தி குறும்படம் எடுக்கப்பட்டுள்ளது. அது தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது.