இன்னும் 4 மாதத்தில் கொரோனாவை கட்டுப்படுத்தலாம்… மாநகராட்சி ஆணையாளர் பிரகாஷ்…

சென்னை:

க்கள் அனைவரும் கூட்டம் கூடுவதை தவிர்த்தால் இன்னும் 4 மாதங்களில் கொரோனா தொற்று பரவலை முழுமையாக கட்டுப்படுத்தலாம் என்று   சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்தார்.

சென்னை தி.நகரில் உள்ள  ஜெயின் சமூகத்தினர் சார்பாக 30 நடமாடும் மருத்துவ வாகனங்களின் இயக்கத்தை சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன், சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் ஆகியோர் இன்று தொடங்கி வைத்தனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த  பேசிய சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன், மாநகராட்சி ஆணையாளர் கூறியதாவது,

“சென்னை மாநகராட்சி கொரோனா தடுப்பு பணியில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 6 அமைச்சர்கள் தலைமையில் குழு அமைக்கப்பட்டு, 15 மண்டலங்கில் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நாளொன்றுக்கு 45,000 சோதனைகள் நடத்தப்படுகின்றன சென்னையில் இறப்பு விகிதம் குறைந்து வருவது மகிழ்ச்சியாக உள்ளது என்றார்.

பின்னர் பேசிய மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் , “சென்னையில் கொ ரோனா பாதிப்பாளர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதால், மக்கள் அஜாக்கிரதையுடன் இருக்கக் கூடாது.

கடந்த ஒரு மாதத்தில் 8 லட்சத்து 16 ஆயிரத்து 683 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதில், 30ஆயிரத்து 421 பேர் குணமடைந்துள்ளனர். மீதமுள்ள 4 லட்சத்து 24 ஆயிரத்து 452 பேர் தீவிர கண்கணிப்பில் உள்ளனர்.

பொதுமக்கள் தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது. அரசின் அறிவிப்புகளுக்கு முழுமையாக ஒத்துழைத்து, கூட்டமாக கூடும் நிகழ்வுகளை தவிர்க்க வேண்டும். அவ்வாறு இன்னும் 4 மாதங்களுக்கு கடைபிடித்தால், முழுமையாக கொரோனா பிடியிலிருந்து விடுபட முடியும்” .

இவ்வாறு அவர் கூறினார்.

ஆக… இந்த ஆண்டு முழுவதும் கொரோனா லாக்டவுன்தான் போலும்…