லண்டன்: கொரோனா வைரஸால் மனிதனை வெல்ல முடியாது என்று தெரிவித்துள்ளார் இங்கிலாந்து அரசி இரண்டாம் எலிசபெத்.

ஈஸ்டர் தின விழாவையொட்டி மக்களுக்கு விடுத்த செய்தியில் அவர் இதைத் தெரிவித்துள்ளார்.

அவர் கூறியதாவது, “இயேசு கிறிஸ்து மீண்டும் உயிர்த்தெழுந்ததை குறிக்கும் வகையில் ஈஸ்டர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்தப் பண்டிகை, கொரோனா தொற்றால் நம்மை வெல்ல முடியாது; நாம் அதிலிருந்து மீண்டு வருவோம் என்பதை நினைவுறுத்தும் வகையில் உள்ளது.

தற்போது கொரோனாவால் இருளும் துயரமும் சூழ்ந்துள்ளவர்களின் வாழ்வில் விரைவில் ஒளியும் வாழ்வும் மலரும். இந்த ஆண்டின் ஈஸ்டர் தினம் இதுவரை இல்லாத வகையில் முற்றிலும் மாறுபட்டதாக உள்ளது. கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருக்க நாம் அனைவரும் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளோம்.

ஆனால், ஈஸ்டர் தினவிழாவை ரத்து செய்யவில்லை. உண்மையில் இதுபோன்ற இக்கட்டான சூழலில்தான் ஈஸ்டர் தின விழா தேவைப்படுகிறது” என்றுள்ளார் எலிசபெத்.