ஐதராபாத்:

தெலுங்கானா மாநிலத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், மாநில மக்களிடையே விழிப்புணர்வை எற்படுத்தும் வகையில் சிறிய ரக காரை கொரோனா வடிவமாக மாற்றி, மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து, மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.

ஐதராபாத்தை சேர்ந்த சுதார் கார் நிறுவனத்தின் அதிபர் சுதார் என்பவர், கொரோனா வடிவில் காரின் உருவத்தை மாற்றியமைத்து, மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்,.

தமிழகத்தில் மக்களிடையே கொரோனா வைரஸ் பரவல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில்,  கொரோனா ஹெல்மெட், கானா பாடல்கள், ஓவியங்கள் மற்றும் விதவிதமான நடனங்கள் என பல்வேறு முறைகளில் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது.

அதுபோல தெலுங்கானா மாநிலத்தில்,   கொரோனா வைரஸ் உருவில் தயாரிக்கப்பட்ட விழிப்புணர்வு கார் ஒன்று ஐதராபாத் வீதிகளில் வலம் வருகிறது. மக்களிடம் கொரோனா பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக ஐதராபாத்தில் வலம் வரச் செய்துள்ளது.

இது குறித்து கூறிய அந்த கார் நிறுவனத்தின் அதிபர் சுதாகர்,  கொரோனா பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்த வேண்டும் என்றும் அதன் ஆபத்து குறித்து மக்களுக்கு அறிவுறுத்த வேண்டும் என்பதற்காகவும்தான் இந்த கொரோனா காரை வடிவமைத்தேன் என்றார்.

பல்வேறு வடிவங்களில் காரின் அமைப்பை மாற்றுவதில் கில்லாடியான சுதார், ஏற்கனவே  பர்கர், கிரிக்கெட் பந்து, கிரிக்கெட் மட்டை மற்றும் ஹெல்மெட் போன்ற  வடிவங்களில் கார்களை உருவாக்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.

Video Courtesy: The Nation