டெல்லி: இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலை தடுக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இருந்தாலும் தொற்று பரவல் ஜெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது.

இன்று காலை நிலவரப்படி,  கொரோனா பாதிப்பு ஒன்றரை கோடியை தாண்டி உள்ளது. அதுபோல, இதுவரை 12.38 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பபட்டுள்ளது.

மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி,  இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதியதாக 2,73,810 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.இதனால் மொத்த பாதிப்பு 1.50 கோடியாக அதிகரித்துள்ளது. அதாவது 1,50,61,919 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று ஒரே நாளில் 1,619 பேர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து மொத்த பலி எண்ணிக்கை 1,78,769 ஆக அதிகரித்துள்ளது

கடந்த 24 மணி நேரத்தில் 1,44,178 பேர் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். இதுவரை குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 1.29 கோடியாக அதிகரித்துள்ளது.

தற்போதைய நிலையில், கொரோனாவுக்கு 19,29,329 பேர் சிகிச்சைப்பெற்று வருகின்றனர் .

இதுவரை 13,56,133 பேருக்கு தொற்று சோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

நாடு முழுவதும்  இதுவரை 12.38 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.நேற்று மட்டும் 12,லட்சத்து 30ஆயிரத்து 7 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.