சென்னையில் 7000 ஐ கடந்தது கொரோனா பாதிப்பு… மாவட்டம் வாரியாக விவரம்..

சென்னை:
சென்னையில் இன்று ஒரே நாளில் 364 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை யடுத்து, பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 7000 ஐ கடந்தது.

தமிழகத்தில் இன்று புதிதாய் 536 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.  இதன் காரணமாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை  11,760 ஆக உயர்ந்துள்ளது.

இன்று பாதிப்புக்குள்ளான 536 பேரில் 364 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள். இதனால் சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை  7117 ஆக அதிகரித்துள்ளது.

இன்றைய நிலவரப்படி சென்னையில் கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றவர்கள் எண்ணிக்கை 5,460.

இவ்வாறு தமிழக சுகாதார துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மாவட்டம் வாரியாக பாதிக்கப்பட்டுள்ளோர் விவரப்பட்டியல்