திருவண்ணாமலையில் மேலும் 151 பேருக்கு கொரோனா: 3 ஆயிரத்தை கடந்த பாதிப்பு

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் மேலும் 151 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. தலைநகர் சென்னையில் பரவலாக காணப்பட்ட கொரோனா இப்போது அண்டை மாவட்டங்களையும் கடுமையாக பாதித்துள்ளது.

இது தவிர, அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா பரவல் புதிய வேகம் எடுத்து பரவி வருகிறது. திருவண்ணாமலை மாவட்டத்தில் நாள்தோறும் 100க்கும் மேற்பட்டவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

நேற்று வரை மாவட்டத்தில் 2,924 பேர் பாதிக்கப்பட்டனர். இந் நிலையில்  இன்று ஒரேநாளில் மேலும் 151 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3075ஆக உயர்ந்துள்ளது. ஒட்டு மொத்தமாக மாவட்டத்தில் இதுவரை 21 பேர் உயிரிழந்து உள்ளனர்.