மும்பை: மும்பையில் தினசரி கொரோனா பாதிப்பு வளர்ச்சி விகிதம் குறைந்துள்ளதாக பிரஹன் மும்பை மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் பதிவு செய்யப்படும் உறுதி செய்யப்படும் கொரோனா வைரஸ் நோய்த் தொற்றுகளில் 20 சதவீதம் பாதிப்பு மும்பையில் உள்ளது. மும்பை நகரத்தில் ஒவ்வொரு நாளும் 4,000 கொரோனா மாதிரிகளை சோதித்து வருகிறது.

ஆனால், இந்த எண்ணிக்கை ஒரு மாதத்திற்கும் மேலாக உயரவே இல்லை.  ஏற்கனவே பாதிக்கப்பட்டவர்களின் முதன்மை தொடர்புகள், அறிகுறிகளைக் காண்பிப்பவர்கள் மற்றும் சுகாதார ஊழியர்கள் போன்றவர்கள் ஆவார்கள். 3 சோதனைகளுக்கும் மும்பையில் குறைந்தது ஒரு கொரோனா பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டு வருகிறது.

இந்த எண்ணிக்கை தேசிய அளவில் இருபது பாதிப்புகளில் ஒன்றாகும். ஜூன் 2ம் தேதி வரையில் கிடைக்க பெற்ற தரவுகளின்படி, கொரோனா பாதிப்பின் சராசரி நாள் ஒன்றுக்கு 8 சதவீதத்திலிருந்து 3.64 சதவீதமாக குறைந்து இருக்கிறது. இத்தகவலை பிரஹன் மும்பை மாநகராட்சி உயரதிகாரி  தெரிவித்துள்ளார்.