டெல்லியில் இன்று 1,142 பேருக்கு கொரோனா பாதிப்பு: 29 பேர் பலி

டெல்லி: தலைநகர் டெல்லியில் இன்று 1,142 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

டெல்லி சுகாதாரத்துறை இன்று வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது: டெல்லியில் இன்று 1,142 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒட்டு மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,29,531 ஆக அதிகரித்துள்ளது.

ஒரு நாளில் மட்டும் 29 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். ஆகையால் அங்கு கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,806 ஆக உயர்ந்துள்ளது.

இன்று 2,137 பேர் கொரோனா சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். அதே நேரத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,13,068 ஆக அதிகரித்துள்ளது. டெல்லி முழுவதும் 12,657 பேர் இன்னமும் கொரோனா சிகிச்சையில் உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.